அரசியல்

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வ மில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க.

Published:Updated:
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
Comments
Share

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், விரைவில் நடக்கவிருக்கிறது. வார்டு வரையறை பிரச்னைகள், வெள்ள பாதிப்பு, கொரோனா பரவல் என ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி இந்தத் தேர்தலை ஒத்திப்போடும் முயற்சியிலேயே இருந்துவந்தது ஆளுங்கட்சியான திமுக. உச்ச நீதிமன்றத்தின் அழுத்தமான உத்தரவுக்குப் பிறகும்கூட தேர்தல் குறித்து ஆர்வம் காட்டவில்லை. கொரோனா மூன்றாம் அலையைக் காரணம் காட்டி இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்ற கணக்கிலிருந்த தி.மு.க-வின் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஐந்து மாநிலத் தேர்தல்!

ஜனவரி 22-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவிருக்கிறது தேர்தல் ஆணையம். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளிலும் அனல் கிளம்பத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி, பங்கீடு, நிதி, உள்ளடி வேலைகள் என இப்போதே குஸ்திகள் ஆரம்பித்துவிட்டன.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வ மில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடம் வார்டுகளைக் கேட்டு மிரட்டவும் முடியாமல், கெஞ்சவும் முடியாமல் பரிதவிக்கிறது பா.ஜ.க. காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்” என்கிறார்கள் அந்தந்தக் கட்சிக்காரர்களே. சரி, இவற்றோடு மற்ற கட்சிகளின் நிலையையும் வியூகங்களையும் அறியலாம் எனக் களமிறங்கினோம்...